பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் முள்ளிநியூஸ்

பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

பஸ் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து பயணித்த பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (30.07.2023) காலை இடம்பெற்றுள்ளது.  

 இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றே இன்று காலை 5 மணியளவில் வீதியில் கவிழ்ந்துள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW