பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரிக்கை அப்பகுதியில் அமைதியின்மை

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் அமைதியின்மை பதிவாகியுள்ளது.
இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ள போதும் இந்த உத்தரவை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் வைத்து ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் முச்சக்கரவண்டிக்குள் இருந்து காணொளி பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் தன்னை தாக்கி கைது செய்ததாக தரிந்து குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவரை பலவந்தமாக பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW