வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம் முள்ளிநியூஸ்

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம்

வேக கட்டுப்பாட்டை இழந்த கார்  ஒருவர் பலி! மூவர் கவலைக்கிடம்


பதுளை - பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றைய தினம் காலையில் (02-07-2023) இடம்பெற்றுள்ளது இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரில் பயணித்த குடும்பம் ஒன்றே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 வேக கட்டுப்பாட்டை இழந்த கார் வீதி அருகில் இருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில் எல்ல பகுதியைச் சேர்ந்த 51 வயதான வாகன சாரதியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW