கிழக்கு மாகாண ஆளுநர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாண ஆளுநர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

கிழக்கு மாகாண ஆளுநர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு


பதுளை மாவட்டத்திலுள்ள பசறை - கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அங்குள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

 இந்த தோட்ட விஜயத்தை இன்றையதினம் (07) மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் (Field Officer)அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். 

 இக்கலந்துரையாடலின் போது தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுட்டிக் காட்டப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆளுநர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW