இலங்கை-வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை

இக்கட்டான சூழ்நிலையினால் விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியமையினால் வைத்தியசாலைகளில் நிலவும் வைத்திய பற்றாக்குறை மற்றும் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,அரசாங்கம் விதித்துள்ள கடுமையான வரிக்கொள்கைகள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் இலங்கை மக்கள் பெரும்பாலோனோர் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு பொருளாதார சூழலையும் கடந்து அதிக வரி மற்றும் நாட்டில் நிலவும் நிலையற்ற தன்மையே காரணம்” எனவும் வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த ஒரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இதனால் நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தில் மாத்திரம் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். இதனால் நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களுக்கான தேவை நிலவிவருகின்றமை பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தவள்ளது.
தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வு பெற்றுள்ள விசேட வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரமும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW