டெங்கு நோயாளர்களுக்கான மகிழ்ச்சி தகவல்
இதன்படி, இந்தியாவின் நோயெதிர்ப்பு சக்தி நிபுணர்கள் இந்த தடுப்பூசியினை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
18 முதல் 50 வயதுக்குட்பட்ட 90 பேரிடம் முதற்கட்ட தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆரம்பகட்ட பரிசோதனையில் பாதகமான விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் டெங்கு தடுப்பூசி வணிக ரீதியாக விநியோகிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயானது உலக நாடுகளிடையே பாரிய போது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பங்களாதேஷில் சுமார் 100,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 450 இருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இவ்வாறானதொரு நிலை காணப்படுகிறது.
இந்த ஆண்டின் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,464 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டதுடன், 36 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி, 60,136 டெங்கு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.
மேலும், டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகமுள்ள 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
