வாக்காளர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா உறுதிபடுத்திக் கொள்ள

இதனடிப்படையில், www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சென்று விபரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தகவல்களைச் சரிபார்க்க தனிநபர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
அவ்வாறு உறுதிபடுத்தும் சந்தர்ப்பங்களில், வாக்காளர் இடாப்பில் இருந்து தகுதியான வாக்காளர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால், செப்டம்பர் 4ஆம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஜனவரி 31 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் 18 வயது நிரம்பியவர்கள், 2023 இல் தங்கள் வழக்கமான குடியிருப்பு முகவரியில் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW