இறக்குமதி தடை நீக்கம்; குறைகிறது கோழி இறைச்சி, முட்டையின் விலைகள்

அதன் பிரகாரம் ஒரு கிலோ கோழி இறைச்சி 1200 ரூபாவுக்கு கீழ் குறைவடைய வாய்ப்புள்ளதாகவும் கால்நடை உற்பத்தி சங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான தீவனப் பொருட்களை இறக்குமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களும், கால்நடை உற்பத்தி சங்கத்தினரும் இத்தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
தீவனப் பொருட்களுக்கான இறக்குமதி தடை காரணமாக உள்நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்ததுடன், தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சி 1500 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
“அரசாங்கத்தின் தடை நீக்கம் காரணமாக கால்நடை தீவனத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான சோளத்தை இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்ய முடியும்“- என கால்நடை உற்பத்தி சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இறக்குமதி வரி குறைப்பு காரணமாக முட்டையின் விலையும் குறைவடையும் எனக் கூறும் அஜித் குணசேகர, எதிர்காலத்தில் முட்டையொன்றை ரூ.40 க்கு வழங்க முடியும் எனவும் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை (18) முதல் சோளம் ஒரு கிலோவுக்கான இறக்குமதி வரி வரி 75 ரூபா முதல் 25 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது.
சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW