எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் அதிகரிப்பு இதுவரை 38 உயிரிழப்பு

இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியில் பிரிவு கூறுகிறது.
தொற்றுநோயியல் பிரிவின் படி, ஜூலை 19 வரை, 2023 இல் இதுவரை மொத்தம் 60,136 டெங்க நொயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 நோயார்கள் பதிவாகியுள்ளனர்.
இரு மாகாணங்களையும் ஒப்பிட்டும் பட்சத்தில் இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமான பதிவாகும் எனவும் தொற்றுநோயியில் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள MOH பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சும் துறைசார் அரச நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான பின்புலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோய்யான இரத்த பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
டெங்கு நோய்க்கான அறிகுறிகளை கண்டுப்பிடிக்க முழுமையான இரத்த, டெங்கு என்டிஜன் என இரண்டுவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முழுமையான இரத்த பரிசோதனைக்கு (full blood count) 400 ரூபாவும், டெங்கு என்டிஜன் பரிசோதனைக்கு ( NSI antigen test for dengue) 1200 ரூபாவும் அறவிடப்பட வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW