தலையை நீட்டியதால் மாணவன் உயிரிழப்பு

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல மலையை நோக்கி செல்லும் குறுக்கு வீதியில் நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வௌியே தலையை நீட்டிய போது மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW