திருகோணமலையின் இயற்கை அழகை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு கடற்படை தடை நீக்கம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையின் மத்தியப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவினை பார்வையிடுவதற்கான சகல வசதிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
மேலும், இதன் மூலம் குறைந்த கட்டணங்களுடன் தரமான சேவை வழங்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
