அஸ்வெசும பயனாளிகளுக்குபணம் பெற போயா விடுமுறை தினம் அரச வங்கிகள் திறப்பு.

அஸ்வெசும பயனாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘அஸ்வெசும’ குறித்த மேலதிக விபரங்களை 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் கீழ் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஹட்டன் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள அரச வங்கிகளுக்கு வருகை தந்து மக்கள் பெற்றுக்கொண்டனர்.
எனினும் சிலருக்கு இன்னும் பணம் வைப்பில் இடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW