சூரியவெவ பிரதேசத்தில் பயங்கரம், அண்ணனை கொடூரமாக கொலை செய்த தம்பி

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 24 வயதுடைய இளைய சகோதரர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW