பாஸ்போட் அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தக்கப்பட்ட இளைஞர்

கடந்த புதன் கிழமை (2)இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மீதே இவ்வாரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
தனது கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது தனக்கு பிறக்கு குடுத்தவர்களின் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர் , தனது கடவுச் சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டதுடன் அலுவலகத்தில் நின்ற பொலிசாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மனிதாபிமானமற்று அவரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
பொலிசார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன் பொலிசாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கடவுச் சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
இதேவேளை அரச கடமைக்கு இனையூறு விளைவித்ததாக நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது