ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி
சந்தேக நபர் ஐக்கிய அரபு இராச்சியம் ஊடாக கனடா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான அனுமதிப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கரும பீடத்தில் வழங்கிய கனேடிய விசா தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அங்கு சந்தேக நபரை குடிவரவு எல்லை அமுலாக்க பிரிவு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணையில் சந்தேகநபர் வழங்கிய விசா போலியானது என தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, 45 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து, தரகர் ஒருவரிடமிருந்து போலி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டதாக தெரிவித்தார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
