அரிசியின் விலையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, அரிசி விலை அதிகரிப்பு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று 2023.08. 21ஆம் திகதி நிலவரப்படி, நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக மொத்தம் 46,904 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையினால் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.....
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
