மீண்டும் ஈராக் கச்சா எண்ணெய் விநியோகம்:விலை குறையும் வாய்ப்பு முள்ளிநியூஸ்

மீண்டும் ஈராக் கச்சா எண்ணெய் விநியோகம்:விலை குறையும் வாய்ப்பு

மீண்டும் ஈராக் கச்சா எண்ணெய் விநியோகம்:விலை குறையும் வாய்ப்பு


உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும், சீனாவின் தேவை குறைந்ததும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இன்றையதினம் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 84.38 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 80.65 டாலராகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW