சினோபெக் நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் எரிபொருள் முள்ளிநியூஸ்

சினோபெக் நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் எரிபொருள்

சினோபெக் நிலையங்கள் ஊடாக  குறைந்த விலையில் எரிபொருள்

 சினோபெக் (SINOPEC) நிறுவனம் தமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொட்டாவ மத்தேகொட பகுதியில் திறந்து வைத்துள்ளது.

 இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்பட்ட வந்த குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்றைய தினம் சினோபெக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

 சீன நிறுவனமான சினோபெக் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. 

 இந்த நிலையிலே சினோபெக் நிறுவனம் தமது கிளையினை திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய ஒப்பந்தத்திற்கு அமைய சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயற்படுத்துவதற்கு 20 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 அத்துடன், மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதலீடு செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் சினோபெக் நிறுவனத்தின் இலங்கை பிரவேசமானது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு மீதான அழுத்தத்தினை குறைக்க உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது நிலவும் எரிபொருள் விலையைவிட மூன்று ரூபா குறைந்த விலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருளை விநியோகிக்க உள்ளது. 

 இதற்கமைய, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW