ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் 4 சுற்றில் இலங்கையை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்

குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நண்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 30ம் திகதி ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
இந்த சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் விளையாடிவருகின்றன.
அதற்கமைய இன்றைய இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்த தொடரில் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
அதில் ஒரு போட்டியில் பங்களாதேஷ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இதனால் இன்றைய போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணி கடந்த நான்காம் திகதி நடைபெற்ற முதலாவது சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளது.
இதனால் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் தற்போது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இன்றைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் எஞ்சிய சூப்பர் 4 சுற்றின் ஐந்து போட்டிகள் மற்றும் இறுதி போட்டி இன்று தொடக்கம் எதிர்வரும் 17ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW