சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இலங்கை முள்ளிநியூஸ்

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இலங்கை

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இலங்கை

செப்டெம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களுக்குள் 22,896 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 
 அதன்படி, செப்டெம்பர் மாதத்திற்கான இலக்கில் 19 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 செப்டெம்பர் மாதத்தில் குறைந்தது 1,20,201 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்க்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின் அடிப்படையில், இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி மற்றும் செப்டம்பர் 6ஆம் திகதிக்கு இடையில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9,27,214 என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மேலும், கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர், அதன் எண்ணிக்கை 143,039 என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW