வெளிநாடு அனுப்புவதாக அம்பாறை இளைஞரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி முள்ளிநியூஸ்

வெளிநாடு அனுப்புவதாக அம்பாறை இளைஞரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக அம்பாறை இளைஞரிடம்  80 இலட்சம் ரூபாய் மோசடி

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம்(16) கைது செய்யப்பட்டுள்ளார்.

 அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்தே சந்தேக நபர் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

 பாதிக்கப்பட்டவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினையடுத்து, குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW