அவசர தொலைபேசி இலக்கம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால்
அதுகுறித்து ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
அம் மாவட்ட பரீட்சைதாரர்கள் தங்களது பிரச்சினைகளை அறிவிக்க 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்க முடியும்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW