எரிபொருள் நிறுவனங்கள், போட்டி போட்டு விலைகள் அதிகரிப்பு! முள்ளிநியூஸ்

எரிபொருள் நிறுவனங்கள், போட்டி போட்டு விலைகள் அதிகரிப்பு!

எரிபொருள் நிறுவனங்கள், போட்டி போட்டு விலைகள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 ( October 1, 2023 10:25 pm) 

 சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும். 

 ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும். 

 இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, 

அதன் புதிய விலை 351 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, 

அதன் புதிய விலை 421 ரூபாவாகும். மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 (October 1, 2023 08:13 pm) 

 இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

 இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. 

 அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும். அதே நேரம் Auto Diesel லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது. இதன் படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும். அதே நேரம் Super Diesel லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபா அதிகரித்துள்ளதுடன்அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

 எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில் 358 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW