இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு முள்ளிநியூஸ்

இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு

இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

 தர்மசாலாவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

 இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

 அந்த அணிசார்பில் துடுப்பாட்டத்தில் Daryl Mitchell அதிகபட்சமாக 130 ஓட்டங்களை பெற்றதுடன் Rachin Ravindra 75 ஓட்டங்களை பெற்றார்.

 பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

 இதன்படி இந்திய அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW