சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

நாளை (30) நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல சேவைகள் இணைந்து இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக சந்தன சூரியராச்சி குறிப்பிட்டார்.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW