ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மூன்று நடுக்கங்கள் பாதிப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்கில் ஈரான் எல்லையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
6.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது மூன்று சக்திவாய்ந்த நடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW