கொழும்பு - திவுலப்பிட்டி வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்- 6 பேர் கைது!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைச் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
இதன் போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேரணியின் ஆரம்பத்தில், பேரணியை நடத்தக் கூடாது என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதன்போது, கலவரமாக நடந்து கொண்ட மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட குழுவினரையும் பொலிஸார் கைது செய்தனர்.
அதன்படி அவர்கள் தற்போது திவுலபிட்டிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.