நிரந்தரமற்ற ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8 ஆயிரத்து 400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 36 ஆண்டுகளில் செய்யத் தவறிய பணிகளை ஒன்றரை ஆண்டுகளில் முன்னெடுத்து வருகின்றோம்.
வட மத்திய மற்றும் வட மாகாணங்களில் தற்போது வீதிகளை அடையாளம் கண்டு, பட்டியலிடும் பணி நிறைவடைந்துள்ளன.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு மாகாணங்களிலும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
எஞ்சிய 6 மாகாணங்களுக்கான காலவரையறையை தயாரித்து பயிற்சிகளை வழங்கி 2024 ஆம் ஆண்டில் இலக்கை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
எமது அமைச்சின் கீழ் உலக வங்கியின் ஆதரவின் கீழ் செயற்படுத்தப்பட்ட செயற்திட்டத்தின் மூலம் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைக்கு ஒன்பது பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW