அரச ஊழியர்களுக்கு மாத்திரம்தான் சம்பள அதிகரிப்பா? திகாம்பரம் அதிருப்தி முள்ளிநியூஸ்

அரச ஊழியர்களுக்கு மாத்திரம்தான் சம்பள அதிகரிப்பா? திகாம்பரம் அதிருப்தி

அரச ஊழியர்களுக்கு மாத்திரம்தான் சம்பள அதிகரிப்பா? திகாம்பரம் அதிருப்தி

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

 கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பழனி திகாம்பரம், மேற்கண்டவாறு கூறியுள்ளார். “இன்று மக்கள் வாழமுடியாதுள்ளனர். 

அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. 

 அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இது நல்ல வேலை. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும். 

 அரசாங்கம் அதிகரித்தாலும் தோட்டக் கம்பனிகள் அதனை செய்யாது. தோட்டக் கம்பனிகளின் அதிகாரிகளை வரவழைத்து சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தரவுகனை ஜனாதிபதி வழங்க வேண்டும். 

 தோட்டத் தொழிலாளர்கள் நாட்டுக்காக உழைக்கும் மக்கள். அந்நியச் செலாவணி நாட்டுக்கு ஈட்டிக்கொடுக்கின்றனர். 

தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் ஆகிறது. ஆனால், அவர்களுக்கு 500 - 950 ரூபாய் வரைதான் சம்பளம் கிடைக்கிறது.

 அரசாங்க தோட்டங்களை கம்பனிகளுக்கு வழங்கியது போன்று தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினால் தேயிலை தோட்டங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு தேயிலை உற்பத்தி அதிகரிக்கும்.

 தோட்டத் தொழிலாளர்கள் 20 கிலோ தேயிலை கொழுந்தை பறித்தால் தினமும் 2000 ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும். இந்த முறைக்கு நாம் மாறாவிடின் தேயிலை தோட்டங்கள் காணாமல் போய்விடும். 

எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் உடனடியாக அதிகரிக்க வேண்டும்.” என்றார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW