விவசாயிகளுக்கு இன்று மகிழ்ச்சியான தகவல் - அரசு அறிவிப்பு முள்ளிநியூஸ்

விவசாயிகளுக்கு இன்று மகிழ்ச்சியான தகவல் - அரசு அறிவிப்பு

விவசாயிகளுக்கு இன்று மகிழ்ச்சியான தகவல் - அரசு அறிவிப்பு

விவசாயிகளுக்கு பெரும் போக பருவ நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்ய அவசியமான அரசாங்கம் வழங்கிய பணத்தின் முதற்கட்டமாக 100 கோடி ரூபா மாவட்ட செயலகங்களின் கணக்குகளில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

 அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டேயருக்கு 15,000 ரூபாய் என்ற வகையில் நிதியை மானியமாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

 இப் பெரும் போக பருவத்தில் எட்டு இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

 மேலும், நெற்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிதி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

 அதற்காக 1200 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW