பாடசாலை சுவர் இடிந்து விழுந்து- மாணவன் உயிரிழப்பு

பாடசாலையின் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் முதலாம் தரத்தில் கல்வி பயின்றுவந்த மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சுவர் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW