நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் : ஜாகிர் நாயக் அதிரடி முள்ளிநியூஸ்

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் : ஜாகிர் நாயக் அதிரடி






நான் யாருக்கும் பயப்பட மாட்டன் என்று பிரபல இஸ்லாமிய அறிஞரான ஜாகிர் நாயக் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இருக்கும் ஜாகிர் நாயக் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்…

இந்திய மீடியாக்கள் என்னை பயங்கரவாதியாக சித்தரிக்கிறது. நான் ஒருபோதும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதில்லை, எப்போதும் மனிதநேயத்தை வலியுறுத்தியே பேசியுள்ளேன்.

நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை,

இந்திய அதிகாரிகள் ஒருவர் கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை, ஊடகங்களின் விசாரணைக்காக நான் வரவேண்டிய அவசியமுமில்லை,

பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளில் அதிக இஸ்லாமிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குமிடையிலான மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி முயற்சித்தால் அதற்காக தாம் முழுமையாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW