இதுவரை மறைத்து வைத்திருந்த இரகசியங்களை வெளியிடுவேன் மகிந்தவை எச்சரிக்கும் மைத்திரி முள்ளிநியூஸ்

இதுவரை மறைத்து வைத்திருந்த இரகசியங்களை வெளியிடுவேன் மகிந்தவை எச்சரிக்கும் மைத்திரி




கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவார்களாயின் அவர்கள் தொடர்பில் இதுவரை மறைத்து வைத்திருந்த இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருக்கிறார்.

இதன்மூலம் அவர்களால் என்றுமே நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றும், அவர்கள் தொடர்ந்து பாதைகளில் அலைந்து திரியும் நிலையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊழல், இலஞ்சம், மோசடியில் ஈடுபடுவோருக்கு இனிமேலும் நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு மாத்தறையில் நேற்று (19) நடந்த வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இந்த வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தேசிய அரசு பற்றி புரிதல் இல்லாதவர்கள் அதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், முந்தைய அரசு நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடனுக்குள் நாட்டை தள்ளியதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதே சசமயம், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள அரசு தாயராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அடுத்த ஐந்து வருடங்களில் தேசிய அரசாங்கம் மேலும் வலுவடையும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மோசடி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நல்லாட்சியில் இடம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

நல்லாட்சியில் உள்ளவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவது தொடர்பில் தான் அறிந்தால் அவர்களுக்கான தண்டனை அதிகமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW