கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களது மாகாணத்திலேயே ஆசிரிய நிமனம்: ரிசாத் – இராஜாங்க கல்வியமைச்சரிடம் பேச்சு முள்ளிநியூஸ்

கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களது மாகாணத்திலேயே ஆசிரிய நிமனம்: ரிசாத் – இராஜாங்க கல்வியமைச்சரிடம் பேச்சு



அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய நியமனத்தின் போது தனது மாவட்டம் தவிர்ந்த பிறமாவட்டங்களுக்கு நியமனம் கடிதம் வழங்கப்பட்டவர்களின் முறையீட்டினை சாதகமான முறையில் பரிசீலனை செய்து அவர்களது வேண்டுகோளினை நிவர்த்திக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி வழங்கப்பட்ட கல்வியல் கல்லுாரி ஆசிரிய நியமனம் தொடர்பில் நியமனம் பெற்றவர்கள் தமக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து ,அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு இந்த நியமனங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு வேண்டியிருந்தார்.

அதனடிப்படையல் கல்வி ராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமைய ஏற்படுத்தப்பட்ட முறைப்பாட்டு பரிசீலனை குழுவினரிடம் இது பாரப்படுத்தப்பட்டு,ஆராய்ந்ததன் பின்னர் உரிய மாகாணங்களு்க்கு இடமாற்றம் பெற்றுக்கொடுக்கும் தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவ்வாறு எழுத்து மூலமான முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்கள் 0112494819 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு இடமாற்றம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளமுடியும் என கல்வி இராஜாங்க அமைச்சரின் அலுவகம் தெரிவித்துள்ளது.

அதே வேளை கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு வேறு மாகாணங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி எம்.ஜெமீல் தமது அலுவலகத்தில் இந்த முறைப்பாடுகளை சேகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW