25,000 அபராதம்: முச்சக்கர வண்டி சாரதிகளும் போராட்டத்துக்குத் தயார்
போக்குவரத்து விதி மீறல்களுக்கு ரூ. 25,000 விதிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகளும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடடும் முறையிடப்பட்டுள்ள அதேவேளை தனியார் பேருந்து உரிமையாளர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளதோடு இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கு இதற்கு முன்னர் அபராதம் இருக்கவில்லையெனவும் தற்போது உள்ளடக்கப்பட்டிருப்பது தவறு எனவும் தெரிவித்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
அண்மையில் முக்கிய ஆறு விதி மீறல்களின் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.