ராசிக் – டான் பிரியசாத் கைது; சந்திரிக்கா வரவேற்பு!
இலங்கையில் இனவாதத்தைப் பரப்புவோருக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இரு வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் (அப்துர் ராசிக் – டான் பிரியசாத்) கைது செய்யப்பட்டமையை வரவேற்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணத்துக்குமான அலுவலக தவிசாளரான அவர், அறிக்கை மூலம் தனது கருத்தை வெளியிட்டிருப்பதுடன் இனத்துவேசம், குரோத வளர்ப்பு மற்றும் வெறுப்பூட்டும் செயற்பாடுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.