கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கோயில் கட்டியதால் சர்ச்சை முள்ளிநியூஸ்

கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கோயில் கட்டியதால் சர்ச்சை



கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய தேவாலயத்தைக் கட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கச்சத்தீவில் உள்ள பழைய அந்தோணியார் கோயிலுக்கு அருகிலேயே, இலங்கை அரசு புதிய கோயிலைக் கட்டி எழுப்பி உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள், தமிழகத்தைச் சேர்ந்த குருக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தேவாலயத்தின் புதிய கட்டடம் வரும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழக கிறிஸ்துவ பக்தர்களிடையே சர்ச்சையை எழுப்பி உள்ளது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW