ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் விளக்கமறியலில் முள்ளிநியூஸ்

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் விளக்கமறியலில்



யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படும் ஆவா குழுவை சேர்ந்த மேலும் 3 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் சந்தேகநபர்களை இன்று () ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேகநபர்கள் தொடர்புப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும்3 சந்தேகநபர்களை புதுக்கடை மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று (08) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW