வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சொந்த ஊரில் நியமனம் பெற்றுக்கொடுத்தது சம்பந்தமாக. முள்ளிநியூஸ்

வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சொந்த ஊரில் நியமனம் பெற்றுக்கொடுத்தது சம்பந்தமாக.


அண்மையில் வழங்கப்பட்ட கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சுமார் 225 பேர் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் 15 பேர் என்னிடம் வந்து தங்களுக்கு திருகோணமலை மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை கிழக்கு மாகாணத்திற்கு உள்ளாவது தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டனர். 15 பேரில் 2 பேர் ஆண்கள் மற்றயவர்கள் அனைவரும் பெண்கள் அதிலும் 6 பேர் வெளி மாகாண தேசிய பாடசாலைகளில் நியமிக்கப்பட்டிருந்தனர்.ஆண்களை விட்டாலும் பரவாயில்லை பெண்கள் அனைவருக்குமாவது கட்டாயம் இதை செய்து கொடுக்கவேண்டும் என தீர்மானித்தேன். முதலில் தேசிய பாடசாலைகளில் நியமித்த 6 பேரில் கிண்ணியா மத்திய கல்லூரியில் வெற்றிடம் காணப்பட்ட பாடங்களுக்கு 4 பேரை நியமித்தேன். ஏனைய இருவரின் நியமனத்தையும் ரத்து செய்து அவர்கள் மாகாண பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டனர்.

அல் ஹம்துலில்லாஹ் !!! அவர்கள் அனைவரும் இன்று சொந்த வலயத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்

இதில் கிண்ணியா பாடசாலைகளில் வெற்றிடம் காணப்படாததால் மூன்று பேர் மாத்திரம் முள்ளிப்பொத்தானை கோட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட (ஒரே மாகாணம்) தேசிய பாடசாலை நியமனம் வழங்கப்பட்ட ஒருவரை தேசிய பாடசாலையில் இருந்து விடுவித்து மாகாண பாடசாலைக்கு உள்வாங்கி இன்று அவருக்கும் சொந்த ஊரான கிண்ணியாவில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை நான் கட்சி பேதம் பார்த்து செய்யவில்லை அவர்கள் யாருக்கு வாக்களித்தவர்கள் என்று கேட்கவில்லை நமது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலே, முடியாவிட்டால் மாவட்டத்திற்குள்ளேயே நியமனம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே செயற்பட்டேன் .

திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே யாராவது நியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள் முன்னதாகவே என்னிடம் வந்திருந்தாள் அவர்களையும் மாவட்டத்திற்குள் நியமிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன்.

இறுதியாக ....... எதிர்காலத்தில் இவ்வாறான ஆசிரியர் நியமனம் வழங்கும் போது யாராவது இவ்வாறு வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டால் அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை நாடி வந்தால் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்.

அல் ஹம்துலில்லாஹ் = எல்லாப்புகழும் இறைவனுக்கே.

அனுப்புனர் 
இஹ்ஸனா.பரீத்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW