நாமலின் நீலப்படை முக்கியஸ்தரே ‘டான் பிரியசாத்’: மங்கள

நாமல் ராஜபக்சவின் நீலப்படை முக்கியஸ்தர் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையின் பின்னணியில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர.
அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டான் பிரியசாத் எனும் திடீர் இனவாதி குறித்தே இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர் நாட்டில் சிங்கள – முஸ்லிம் மக்களிடையே முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான சதிப்புரட்சிகளில் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருவதாகவும் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒற்றுமையாக வாழும் இவ்விரு இன மக்களையும் பிளவுபடுத்தி முஸ்லிம்கள் அச்ச சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டு வருவதாகவும் பாராளுமன்றில் வைத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.