நாட்டைக் கூறு போட அனுமதிக்க முடியாது: மஹிந்த முள்ளிநியூஸ்

நாட்டைக் கூறு போட அனுமதிக்க முடியாது: மஹிந்த


பௌத்த மதத்தின் முக்கியத்துவதை இல்லாதொழிக்கவோ நாட்டைக் கூறு போடவோ அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

ஐக்கிய இலங்கை என பேச்சளவில் மாத்திரம் சொல்லிக்கொண்டிருப்பதால் ஐக்கியம் ஏற்படப் போவதில்லையெனவும் அதற்காக நாட்டைக் கூறு போட் டு பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தை அழிக்க முனைவதையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், சமையலறை என்றாலே என்னவென்று தெரியாதவர்களாலேயே இம்முறை பட்ஜட் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதன் தாக்கத்தை மக்கள் உணர ஆரம்பித்திருப்பதாகவும் பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மேலும் கருத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW