BREAKING NEWS:-SLTJ அப்துல் ராசிக் கைது! முள்ளிநியூஸ்

BREAKING NEWS:-SLTJ அப்துல் ராசிக் கைது!



இலங்கையில் இனவாத நடவடிக்கைகள், இனமுறுகலை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் அப்துல் ராசிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தடுப்புப் பிரிவின் நடவடிக்கையின் கீழ் மாளிகாவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள ராசிக் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, நேற்றைய தினம் டான் பிரியசாத் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW