வாடகை செலுத்த வசதியில்லை: மஹிந்த ராஜபக்ச முள்ளிநியூஸ்

வாடகை செலுத்த வசதியில்லை: மஹிந்த ராஜபக்ச


மஹிந்த ராஜபக்சவின் இணைப்புக் காரியாலமாக பெரும ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நெலும் மாவத்தை அலுவலகம் தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகமாக மாறியுள்ள நிலையில் இது குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, வாடகை செலுத்த முடியாது திணறியதால் தான் கை விட்டு விட்டதாகவும் தற்போது ‘அவர்கள்’ உபயோகித்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

எனினும், அங்கு தானும் அறையொன்றைக் கேட்டுப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை புதிய கட்சியின் தலைமைத்துவத்தை விரைவில் அவரிடம் கையளிக்கப் போவதாக ஜி.எல். பீரிசும், பலவந்தமாகவாவது மஹிந்தவை அழைத்து வருவோம் என பசில் ராஜபக்சவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW