தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தெற்கு, மத்திய,மேல்,சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ள்து.
மேலும் சில இடங்களில் காலை வேளையில் பனியுடனான வானிலையே காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை இடி மின்னல்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிறுத்தியுள்ளது.