வடபுல மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள்: விக்ரமபாகு
வட பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் தற்போது அரசுக்கு எதிரான மனோநிலை வடக்கில் எழுச்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளார் நவசமசமாஜ கட்சியின் விக்ரமபாகு கருணாரட்ன.
வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதாகக் கூறி தற்போது ஆயுதமேந்திய பொலிசார் ரோந்து பணிகளில் ஈடுபடுவதிலும் தமிழ் பேச முடியாத பொலிசார் கடமையில் இருப்பதினாலும் எந்த முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லையெனவும் அரச விரோதப் போக்கு வளர்வதின் பொறுப்பை அரசும் ஏற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.