மஹிந்த நாடு திரும்பினார்; ரணில் வெளிநாடு பயணமானார்
ஏழு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஹொங்கொங் பயணமாகியுள்ளார்.
ஹொங்கொங்கில் இடம்பெறவுள்ள 2017ல் உலகம் எனும் மாநாட்டில் கலந்து கொள்ளவே பிரதமர் பயணித்துள்ள அதேவேளை சீன அரசின் அழைப்பில் அங்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
சீன – இலங்கை உறவுகள் தொடர்பில் சர்ச்சைகள் உருவாகியிருந்த நிலையில் மஹிந்தவின் சீன விஜயம் இடம்பெற்றிருந்தமை அரசயில் ரீதியான சந்தேகங்களை உருவாக்கியிருந்த போதிலும் அவருக்கு அங்கு தேவையான உதவிகளை செய்யும்படி வெளியுறவுத்துறை அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.