பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு.! முள்ளிநியூஸ்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு.!


ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டான கடியல பொலிஸ் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூடுக்கு இலக்காகியுள்ளனர்.

வீதியில் சென்ற மர்ம நபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்து, அவரையும் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர், இந்த மர்ம நபர்கள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அதிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், மோட்டார் சைக்கிளையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW