பொலநறுவையில் பொலிஸ் அதிகாரி குத்திக் கொலை
பொலநறுவை, புதிய நகரம் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலநறுவை திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.