சுயநலப் பொறிக்குள் அப்பாவிகளா?
இத்தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இத்தலைப்பில் எழுதுவற்குக் காராணம் ஒரு சில பொதுநலப் போர்வை போர்த்திய சுயநலவாதிகளின் செயற்பாடுகளினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் துன்பங்ளையும்;;, வலிகளையும்; வேதனைகளையும் சுட்டிக்காட்டுவதற்குத்தான்.
ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொரு குழுவும் தங்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்படுகின்றபோது, அவர்களின் நலன்கள் பிடுங்கப்படுகின்றபோது அல்லது அவர்களின் முறைதவறிய செயற்பாடுகளுக்கெதிராகச் சட்டங்கள் வகுக்கப்பட்டு அவை அமுல்படுத்தப்படுகின்றபோது, அவர்களின் உரிமைகளையும் சலுகைகைளையும் பெற்றுக்கொள்வதற்காகவும் தங்களின் ஒழுங்கற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, மட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படுகின்ற சட்டங்களுக்கெதிராகவும் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் பல உபாயங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அந்தவகையில், தொழில்சங்கங்களினதும் அச்சங்கங்களின் உறுப்பினர்களினது உரிமைகள், சலுகைகள், நலன்கள் மறுக்கப்படுகின்றபோது அல்லது அவற்றில் குறைவு ஏற்படுத்தப்படுகின்றபோது அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்குமான அழுத்தங்களை உரிய தரப்புக்கு ஏற்படுத்துவதற்காக அவற்றை மேற்கொள்வதற்குரித்தான மார்க்கங்களாக பணிப்பகிஷ்கரிப்புக்களும்; போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
எத்தரப்பிடமிருந்து தங்களது நலன்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமோ அல்லது தண்டணைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமோ அத்தரப்புக்கெதிராக அல்லது அத்தரப்பின் கவனத்தை தங்கள் பக்கம் திசை திருப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் அப்பாவி மக்களின் உரிமைகளையும் அவர்களின் நாளாந்த செயற்பாடுகளையும் பாதிக்காத வகையில்; முன்னெடுக்கபடுவது அவசியமாகும்.
சுயநலன்களும் அப்பாவி மக்களும்
உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பொதுப் பகிஷ்கரிப்பு, அடையாள வேலைநிறுத்தம், சட்டப்படியான வேலை போன்ற பல வடிவங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு சுயநலன்கள் அலலது பொதுநலன்கள் வெற்றிகொள்ளப்படுகின்றபோதிலும் அவற்றினால்; பல அப்பாவிகளின் உரிமைகள் மீறப்படுகின்றன. பலர் பல்வேறு சிரமங்களையும் அசௌகரிங்களையும் எதிர்நோக்குகின்றனர்.
இப்போராட்டங்களினாலும், பணிப்பகிஷ்கரிப்புக்களினாலும் சமூக மட்டத்திலுள்ள பணம்படைத்தவர்களும் செல்வாக்கு நிறைந்தவர்களும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், வைத்திய சங்கம், தனியர் போக்குவரத்துச் சங்கம் உட்பட பல மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுடன் தொடர்புடைய அவற்றை வழங்குகின்ற ஊழியர்களும் சங்கங்களும் மேற்கொள்கின்ற இத்தகைய நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவதும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதும் சமூகமட்டத்தில் உள்ள பணமற்ற, செல்வாக்கில்லாத அப்பாவிகளே என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
பொதுநலப் போர்வைக்குள் ஒழிந்திருந்துகொண்டு சுயநலன்களை வெற்றிகொள்வதற்காக போராட்டங்களையும் பகிஷ்கரிப்புக்களையும் நடாத்திவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனம் வருந்துகிறோம் என சடங்குக்காக ஊடகங்களில் அறிக்கை விடுவதனால் மாத்திரம் அம்மக்களின் வலிகளையும் வேதனை உணர்வுகளையும் அணைத்துவிட இயலாது.
கடந்த ஆட்சியாளர்களின்; ஆட்சிக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் எதிர்ப்போரட்டங்களை விடவும் 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி என்றழைக்கப்படுகின்ற கூட்டாச்சி அரசாங்கக் காலத்தில்; மேற்கொள்ளப்படுகின்ற பணிப்பகிஷ்கரிப்புக்களும் போராட்டங்களும் எல்லை மீறி நகர்கிறதா என வினவத் தோன்றுகிறது. அல்லது எல்லைமீறி நடப்பதாகவே அமைந்து விடுவதைக் காண முடிகிறது.
பணிப்பகிஷ்கரிப்புக்களுக்கும் போராட்டங்களுக்கும் கடந்த ஆட்சியிலும் பார்க்க இவ்வரசாங்கத்தில் அதிகளவிலான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடிக்கடி இவ்வாட்சியில் அமைச்சர்களாக உள்ளவர்களினால் கூறப்பட்டு வருகின்றன.
அதற்கு உதாரணமாக துறைமுக அதிகார சபையில் தம்மை இணைத்துக்கொள்ளுமாறு அம்பாந்தோட்டை மாகம்புர மேலாண்மை தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள போராட்டம் பல சிக்கல் நிலைய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது.
இரு சர்வதேச கப்பல்களின் பயணத்துக்குத் தடையேற்படுத்தும் விதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செயற்பட்டதனால் அக்கப்பல் நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும,; இதனால் சர்வதேச ரீதியில் இந்நாட்டுக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. இந்நிலையானது சுயநலத்துக்கான அல்லது பொதுநலத்துக்கான போராட்டச் சுதந்திரம் எல்லை மீறியிருக்கிறது என்பதைப் புடம்போடுகிறது.
இருப்பினும், தத்தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லது ஒரு சிலரின் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்களும் பணிப்பகிஷ்கரிப்புக்களும் சாதாரண மக்களின் உரிமைகளுக்கும்;; அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நாட்டினது சமூக, பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகையை போராட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புக்கள் சாதாரண மக்களின் தனிநபர் உரிமைகளைப் பாதிக்காத வகையிலும,; அவர்களின் அன்றாட செயற்பாடுகளில் தடங்களை ஏற்படுத்தாத ரீதிலும் பாதுகாக்க வேண்டியதும், போராட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பின்போது முறைதவறிச் செயற்படுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது.
ஏனெனில், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்து நிம்மதியாக வாழ்வதற்காகவே கடந்த அராசங்கத்தை நிராகரித்து இந்த அரசாங்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வாறான மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படுவது அவசியமாகும். இந்த அரசாங்கத்தின் ஈராண்ட்டுக் காலம் பல எதிர்ப்புக்களையும் சவால்களையும் எதிர்நோக்கியிருக்கிறது. குறிப்பாக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பல எதிர்மறைக் கருத்துக்களையும் போராட்டங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நல்லாட்சியும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளும்
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிவிப்பில,; வவுனியாவில் பொருளதார மையம், கொழும்பில் நிதி கேந்திர மையம், யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பூங்கா, 2016 ஜனவரியிலிருந்து இலத்திரனியல் அடையாளா அட்டை, கடனட்டைகளுக்கான முத்திரை தீர்வுக் குறைப்பு, கிராம சேவகர் பிரிவுக்கு 1500 மில்லியன், மலையக வீடமைப்புக்கு 1000 மில்லியன், வருமானம் குறைந்தோருக்கு 100,000 வீடுகள், அரச ஊழியர்களுக்கு 150,000 வீடுகள், சமையல் எரிவாயு உட்பட 11 பொருட்களின் விலைக்குறைப்பு, கல்வித்துறைக்காக 90,000 மில்லியன், உயர்தரத்திற்கு பின்னர் தொழிற்பயிற்சிக் கட்டணம், பல்கலைக மாணவர்களுக்கு மடிக் கணினி பெறக் கடன், புத்தகம், சஞ்சிகை இறக்குமதி வரி நீக்கம், கட்டடிடத்துறையில் பயிற்சி பெறுவோருக்கு 10,000 ரூபா போன்ற அறிவிப்புக்கள் கடந்த 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பில் முன்வைக்கப்பட்டிருந்தது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாகக் காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும். மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, கல்வி அபிவிருத்திக்காக மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்குதல், விஷேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 150 ரூபா அதிகரிப்பு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, சிறிய மற்றும் நடுத்தவர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கத் திட்;டம், தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டம், வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு, 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச வீடுகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என பல்வே அறிவிப்புக்ள 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, 2016, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்புக்களில் சுமூக பொருளாதா அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் சலசலப்பையும் எதிர்மறைக் கருத்துக்களையும் வெளிப்படுத்தாத போதிலும், இவ்விரு ஆண்டிலும் முன்வைக்கப்பட்ட அபராத விதிப்புக்களும் வரிகள் தொடர்பான அறிவிப்புக்களுமே எதிர்மறைக் கருத்துக்களையும் போராட்டங்களையும், பணிப்பகிஷ்கரிப்புக்களையும் உருவாக்கியிருக்கிறது.
2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிவுப்புக்களில் அரச மற்றும் தனியார் தொழிலாளர்களுக்கும் பொது மக்களும் சாதக பாத நிலைகள் காணப்பட்டபோதிலும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட எதிர்ப்புக்கோஷங்கள் போராட்டங்கள் மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பின் பின்னராக வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு, தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் ஏனைய முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை சேவை வான் உரிமையாளர்கள் போன்றோர் மேற்கொண்ட போராட்டங்கள் போன்று அக்காலங்களில் எழுப்பப்படவில்லை என்பதை இங்கு நினைவுபடுத்துவது பொறுத்தமாகும்.
இதற்கு மறைமுகமான அடக்குமுறைகளும் ஆதிக்கங்களும் கோஷங்களையும், போராட்டங்களையும், பணிப்பகிஷ்கரிப்புக்களையும் கடந்த காலங்களில் கட்டுப்படுத்தியிருந்தன என்று கூறினாலும் அதுவும் பிழையாகக் கருதப்படாது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பை எதிர்த்து போராட்டங்களை நடாத்துவதற்கான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.
போராட்டங்களுக்கான அறிவிப்புக்களும் பாதிக்கப்படும் அப்பாவிகளும்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், வரப்பிரசாதங்கள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு, அரச ஊழியர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளதாக இணையத்தள செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தோடு, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களின் உரிமைகளை மீறும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரவு செலவுத்திட்டம் கடன், தண்டப்பணம், வரி உட்பட கட்டண அறவீடுகளினால் நிரம்பியுள்ளதாகவும், மக்களின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்யும் வகையிலும் மக்களின் உரிமைகளை மீறும் வகையிலும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய தொழில் சங்க மத்திய நிலையத்தின் தலைவர் லால் காந்த குறிப்பிட்டுள்ளதாக இணைத்தள செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்துடன், போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக வரவு செலவுத்திடடத்தில் முன்மொழியப்பட்ட 25ஆயிரம் ரூபா அபராதத் தொகையை நீக்குமாறு தெரிவித்து மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு போராட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்புக்களுக்கான அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில,; இவற்றினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
குறிப்பாக வைத்தியர்களினதும் தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களினதும் பணிப்பகிஷ்கரிப்பினால் அப்பாவிப் பொதுமக்களும், சாதாரண அரச, தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என அன்றாடம் பொது வைத்தியசாலைகளையும், பொதுப்போக்குவரத்து பஸ்களையும் தங்களது சேவைக்காகப் பெற்றுக்கொள்கின்ற சமூக மட்டத்தின் நடுத்தர மற்றும் அடிமட்ட வர்க்கத்தினரே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சமூகத்தின் உயர் வர்க்கத்தினரும், அரச தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படுவதில்லை. அவர்களின் வசதி, தொழில் அந்தஸ்த்து என்பவற்றின் மூலம் அவர்களின் வைத்திய மற்றும் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் அப்பாவி மக்கள்; அவ்வாறு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது வேதைனப்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் மனிதாபிமானம் பொதுநலப் போர்வை போர்த்தியவர்களினால் விலைபேசப்படுகிறது.
மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள தொழில் சங்கங்கள் அம்மக்களின் அன்றாட வாழ்க்கைச் சௌகரியம், சுதந்திரமான செயற்பாடுகள் எனப்வற்றுக்கு தடங்கள் ஏற்படாத வகையில் தமது போராட்டங்களையும் பணிப்பகிஷ்கரிப்புக்களையும் முன்னெடுப்பது அவர்களின் உண்மையான நோக்கத்தை அடைவதற்கு வழிகோலும்.
அவ்வாறில்லாது. தங்களது சுயநலங்களை வெற்றிகொள்வதற்காக பொதுநலம் என்ற பெயரில் போராட்டங்களை முன்னெடுப்பதில் எவ்வித வெற்றியையும் காணமுடியாது. அவை அப்பாவி மக்களை இம்சைப்படுத்தியதாகவே அமையும். ஏனெனில் கடந்த காலம் முதல் இன்று வரை ஒரு சில தொழில்சங்கங்களினால் பொதுநலன்களை வெற்றிகொள்வதாக வெளிக்காட்டி சுயநலன்களை வெற்றிகொள்வதற்காக மேற்கொள்ளப்படுகினற் போராட்டங்களும் பணிப்பகிஷ்கரிப்புக்களும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை.
சமுதாயத்தில் நாங்களே உயர் பதவி வகிக்கின்றோம் என்று மார்பு தட்டிக்கொண்டு போராடுகின்றவர்களினால் மனிதாபிமானமும் மனிதநேயமும் குழிதோண்றிப்புதைக்கப்படுகிறது. அவர்கள் சுயநலங்களை வெற்றிகொள்ள முயற்சிக்கிறார்கள். சுயநலங்களை வெற்றி கொள்வதற்கு அறிவு தேவையில்லை என தந்தை பெரியார் குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவமுது பொறுத்தமாகும்.
பொதுநலத்தை மழை பெய்வதாகக் கருதினால் மழைக்குக் குடை பிடிப்பது சுயநலமாக அமையும். தங்களது நலனபை; பெற்றுக்கொள்வதற்காக பொதுநலப் போராட்டங்கள் என்றபெயரில் மக்களை இம்சைப்படுத்தும் வலிகளைச் சுமக்கச் செய்யும் மனித தர்மமாகது.
ஒட்டுமொத்த பணிப்பகிஷ்கரிப்பும,; போராட்டங்களும் சம்பந்தபட்ட தரப்பினரின் சுயநலக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான பொதுநலப் போராட்டமாக வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டாலும் அந்த சுயநலப் பொறுக்குள் சிக்குவது வறுமானம் குறைந்த வரிய மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான்.
சுயநலத்துக்காகவே அல்லது பொதுநலத்துக்காகவே முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களோ அல்லது பணிப்பகிஷ்கரிப்புக்களோ அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில் இடம்பெறுவது அவசியம் என்பதுடன் தொழிற்;சங்கங்கள் மேற்கொள்ளும் போரட்டம் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புக்கள் மக்களை வேதனையையும் வலிiயுயும் சுமக்கச் செய்யாது; பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி ஒன்றாகும்.