பாசிக்குடா கடலில் ஆணின் சடலம் மீட்பு முள்ளிநியூஸ்

பாசிக்குடா கடலில் ஆணின் சடலம் மீட்பு


பாசிக்குடா கடலில் நேற்று (29.12.2016) வியாழக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிர் இழந்தவரின் சடலம் இன்று (30.12.2016) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளில் கரையொதுங்கிய நிலையில் கண்டு எடுக்கப்பட்டதாக கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹீரகல தெரிவித்தார்.

கல்குடா பொலிசார், பாசிக்குடா பிரதேச வாசிகள், மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று மாலை தேடுதல் நடத்திய போதும் நேற்று இரவு வரை சடலம் கண்டெடுக்கப்படாத நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

கம்பளை கெசல்வத்த வீதி, கத்துகெட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எச்.சாந்தகேவா (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளங்காணப்ப்டுள்ளது. நேற்று குடும்பத்தாருடன் சுற்றுலா வந்த சமயமே பாசிக்குடா கடலில் நீராடிய போது நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW